தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு !

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு !

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி (காந்தி ஜெயந்தி) கிராம சபை கூட்டம் பாரதி நகர் OHT அருகில் வைத்து வெள்ளிக்கிழமை (02.10.2026) காலை 11:00 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தனி அலுவலர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.

தூய மரியன்னை கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஷிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர்.எழிலரசி, சுயநீதி பிரிவு இயக்குனர் அருட் சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் மற்றும் ஸ்பார்க் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் நுண்ணுயிரியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் இருதய எபிபா ,காவிய வர்ஷினி மற்றும் துணை பேராசிரியை பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்பாக சுகாதார ஆய்வாளர் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் உண்ணிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் நலன் பேணுதல் மற்றும் போதை ஒழிப்பு மூலம் குடும்ப நலன் பேணுதல் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும் சபை கூட்டம் முடிவில் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை, மாவட்ட சட்டப் பணிகள் குழு அதிகாரி, மின்சார வாரியம், காவல்துறை மற்றும் பிற பொதுப்பணி துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் இலவச சட்ட உதவி பெற குறிப்பிட்ட தகுதிகள் பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நுண்ணுயிரியல் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலுவை கிருபாகரி அனிஸ்சியா , துணை பேராசிரியைகள் சுஜிதா மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.