தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் குடும்பநலச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் குடும்பநலச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30.09.2026 புதன்கிழமை அன்று 12.30 மணியளவில் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் குடும்பநலச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழச்சியில் சிறப்பு அழைப்பாளராக செல்வமாரியப்பன் வழக்கறிஞர் Panel Advocate மற்றும் Legal Aid Counsel ஓட்டப்பிடாரம் போதைப்பொருள் பழக்கம் மாணவர்களின் கல்வி உடல்நலம்> குடும்ப உறவுகள் மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும், மேலும் குடும்பநலம், குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டம் பாதுகாப்பு, குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு, மற்றும் சட்ட உதவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, ஆகிய இரண்டையும் ஒருங்கிணைந்து வழங்கும் வகையில் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

கல்லூரி முதல்வர் முனைவர்.இளங்குமரன் ஆலோசனையின் படி, கணிதத்துறை தலைவர் மாலதி போதைப்பொருள் விழிப்புணர்வு குழு, தமிழ்த்துறை தலைவர் முனைவர்.செல்லக்கனி (NSS) நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.