தேசியப் பறவையை மீட்க மனித நேயத்துடன் பறந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் !

தேசியப் பறவையை மீட்க மனித நேயத்துடன் பறந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் !

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி தென்புறம் கிழக்கு சாலையில் அமைந்துள்ளது கமாக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

இந்த ஏரியாவில் மரங்கள் மற்றும் சீமை உடை மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் தேசியப் பறவை மயில் அதிகமாக உயிர் வாழ்கிறது.

இந்த கமாக் பள்ளி சாலையில் கல்லூரி தென் புற சுற்றுச் சுவர் அருகில் சமீபத்தில் மின்மாற்றி ( Transformer ) அமைக்கப்பட்டுள்ளது .இது இந்த ஏரியாவின் மின்னழுத்த மாற்றத்திற்கு உதவியாக உள்ளது.

இருப்பினும் மனிதனின் சுயலாபத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மின்மாற்றி கடத்தும் மின்சாரம் தாக்கி அடிக்கடி இங்கே வாழும் மயில்கள் உயிர் இழக்கின்றது.

மேலும் இதில் மின்சாரம் தாக்கி இறந்த காகங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.இது மனவருத்தத்தை தருவதாக இருந்தாலும் தேசியப் பறவை மயில் இறப்பது மிகுந்த மனவேதனையாக உள்ளது.

இன்று அதிகாலை நான் தெருவில் வசித்துவரும் நாய்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த போது மயில் மின்மாற்றியில் அடிபட்டு பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

நான் விரைவாக சென்று மயிலை தூக்கி வாயை திறந்து தண்ணீர் கொடுத்‌து தடவிக் கொடுத்தேன்.சிறிது சிறிதாக உடல்நிலையில் முன்னேற்றம் கண்ட மளிகைக் கண்டு மகிழ்ச்சி ஆனது உள் மனது.

வனத்துறையின் தொடர்பு எண் இல்லாத காரணத்தால் தூத்துக்குடி நகர்ப்புற தீயணைப்பு ஸ்டேஷன் அலுவலருக்கு ( SO ) இரண்டு கால் மணி ( Ring ) போனவுடனேயே வேகமாக தொடர்பை எடுத்த பெண் அதிகாரி கனிவாக கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.ஸ்டேஷன் வீரர்கள் வருவார்கள் லோகேஷன் சொல்லுங்கள் என்று இணைப்பை துண்டித்தார் அந்த தீயணைப்பு அதிகாரி.

அடுத்த 2 நிமிடத்தில் என்னை தொடர்பு கொண்ட அலுவலர் சுரேஷ் குமாரிடம் விபரங்களை கூற கிட்டத்தட்ட தீயணைப்பு ஸ்டேசனில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள எனது இடத்திற்கு 4 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் வந்தார்கள்.

கனிவுடன்,மனித நேயத்துடன் தேசியப் பறவையை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார்கள்.

நான் ஒரு வனத்துறை அலுவலரை தொடர்பு கொண்டேன் அவர் தான் திருச்செந்தூர் அலுவலகத்திற்கு மாறுதலாகி வந்து விட்டேன் என்று கூற நான் தூத்துக்குடி அலுவலர் தொடர்பு எண் தாருங்கள் என்று கேட்க அவர் கொடுத்த எண்ணில் தொடர்பு கொள்ள அந்த வன அதிகாரி பதில் கூற தனது எண்ணை தொடர்பில் இணைக்கவில்லை.

தொடர்பு கொண்ட உடன் வேகமாக வந்த தீயணைப்பு வீரர்கள் மிகவும் பாராட்ட வேண்டியவர்கள்.அநேகமாக தமிழ் நாட்டில் தியணைப்புத்துறை தான் வேகமாக செயல்படும் துறையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வீரர்கள் சென்றவுடன் அந்த ஏரியாவில் உள்ள சர்ச் வாசலில் ஒரு பாம்பு சாகசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இயற்கை வளங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும் இந்த அனைத்து பறவை, விலங்குகள் மற்றும் ஊர்வன பாதுகாக்கப்பட வேண்டியவையாகும்.

சொல்லப்போனால் இவைகள் எல்லாம் இந்துக்கள் முறைப்படி தெய்வங்களின் வாகனங்கள் ஆகும்.

நாய் – பைரவர்

மயில் – முருகன்

காகம் – சனி ஈஸ்வரன்

பாம்பு – சிவன் மற்றும் முருகன்

இந்த உயிர்கள் எல்லாம் பாதுகாக்கப்படவில்லை என்றால் நாம் இயற்கை பேரழிவால் பாதிக்கப்படுவது உறுதி.