தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டாரம், டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு (2026–2028) நிகழ்வு நடைபெற்றது.

அரசாணை (நிலை) எண்: 143, நாள்: 19.08.2026 மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதத்தின் படியும், மாவட்ட ஆட்சியர் ஆணையின் படியும், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படியும், உதவித்திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையிலும், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் முன்னிலையிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நிகழ்வு பெற்றோர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) வனிதா பார்வையாளராக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் படி, பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான ஒவ்வொரு உறுப்பினரும் முறையாகத் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவராக செல்சியா , துணைத் தலைவராக சந்தியா ஆகியோரை தேர்வு செய்தனர்.

பின்னர், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் “பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளியின் வளர்ச்சிக்காகவும் நான் என்ன செய்யப் போகிறேன்?” என்ற தலைப்பில் தங்களது கருத்துகளையும், பள்ளி மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கை மற்றும் வருகை, கல்வித் தர மேம்பாடு, மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வளர்ச்சிப் பணிகளில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலர், சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மைக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் நிறைவாக,பள்ளி உதவி ஆசிரியை மேகலா தேவி நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், விதிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தொடர்பான உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் தேவையான தகவல்கள் உரிய செயலியில் பதிவு செய்யப்பட்டு (Update) மேற்கொள்ளப்பட்டன.
பள்ளி மேலாண்மைக்குழு – பெற்றோர் பங்களிப்புடன், பள்ளி வளர்ச்சிக்கான புதிய பயணம் தொடர்கிறது.














