நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி : தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிகள் முதலிடம் :
கல்வித் தந்தை ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கினார் !
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 2.09.2026 நேற்று நடைபெற்றது,
இந்த போட்டியில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில் ஆண்கள் போட்டியில் தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரி அணி முதலிடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும்,பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றது .
பெண்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி முதலிடத்தையும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் ,ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றது.

மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமையேற்று நடத்தினார்.
கல்லூரிச் செயலர் கல்வித் தந்தை ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பல்கலைக்கழக ஆண்களுக்கான போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி வரவேற்று பேசினார்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் செய்திருந்தார்.












