நுண்ணுயிரியல் துறை சார்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற “மைக்ரோப்ஸ் – 2026 ” போட்டியில் கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் !

நுண்ணுயிரியல் துறை சார்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற “மைக்ரோப்ஸ் – 2026” போட்டியில் கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்!

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே “மைக்ரோப்ஸ் – 2026” என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது.

மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல்துறை முதுகலை மற்றும் இளங்கலை மாணவ மாணவிகள் பங்கேற்று, வார்த்தை புதிர், சுவரொட்டி விளக்கக்காட்சி, ஊமை நாடகப் போட்டி ஆகியவற்றில் முதலிடத்தையும், பேச்சு போட்டி, சந்தர்பத்திற்க்கு தகுந்தவாறு பேசுதல், ஊமை நாடகம், நெருப்பில்லா சமையல் போட்டி ஆகியவற்றில் இரண்டாம் இடத்தையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவிகளைக் கே.ஆர். கல்வி குழுமங்களின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரி தாளாளர், முதல்வர், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.