டிலைட் பப்ளிக் பள்ளி மாணவனுக்கு Noble Book of World Records சாதனை அங்கீகாரம்!

டிலைட் பப்ளிக் பள்ளி மாணவனுக்கு Noble Book of World Records சாதனை அங்கீகாரம்!

டிலைட் பப்ளிக் பள்ளி மாணவன் செல்வன் ஜான் டீஷோன் Punch Medai – Punch Stage, ஆல்வார்பேட், சென்னையில் ஆகஸ்ட் 16ம் நாள் காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெற்ற கீபோர்டு வாசித்ததில் காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை கண்களை கட்டிக் கொண்டு அற்புதமாக வாசித்து உலக சாதனை படைத்துள்ளார். இவரது இந்த கலைச் சாதனை சர்வதேச அளவிலான (Noble Book of World Records) புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.

மாணவர் மேற்குறிய போட்டியில் பல்வேறு பாடல்களையும், மெல்லிசைகளையும் அற்புதமாக வாசித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவரது இந்த இடைவிடாத முயற்சியையும் இசைத் திறமையும் நேரில் பார்வையிட்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாராட்டினர்

இளம் வயதிலேயே இந்த அரிய உலக சாதனையைப் படைத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு பள்ளி தலைவர்  ஜெயசீலன், பள்ளி தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி முதல்வர்  சோபியா செல்வராணி, பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.