கல்வியியல் ( பி.எட் ) கல்லூரிகளில் இன்று முதல் பிஎட் ஆன்லைன் கலந்தாய்வு :

கல்வியியல் ( பி.எட் ) கல்லூரிகளில் இன்று முதல் பிஎட் ஆன்லைன் கலந்தாய்வு :

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட் படிப்பில் சேர்வதற்கான ஆன் லைன் கலந்தாய்வு இன்று துவங்கியது.

2026-27-ம் ஆண்டு கல்வி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்தது.

மொத்தத்தில் 5,900 மாணவ, மாணவிகள் விண்ணபித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில், மாணவர்களின் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 10-ம்தேதி வரை நடைபெறும். மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 14-ம் தேதி ஆன்லைனில் வழங் கப்படும். www.twise.ac.in என்ற இணைய தளத்தில் இருந்து அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தங்களுடைய ஒத்துப் போன கல்வியியல் கல்லூரிகளில் ஆக.17 முதல் 21-ம் தேதிக்குள் சேர வேண்டும். திட்ட மிட்டபடி, அரசு மறும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆக.24-ம் தேதி தொடங்க உள்ளது.