ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு : விரைவில் அறிவிப்பு வெளியாகும்!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு :
விரைவில் அறிவிப்பு வெளியாகும்!

ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவு செய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர்​கள், தையல், ஓவியம், உடற்​கல்விஉள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர்​கள், பட்டதா​ரி, முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் டிஆர்பி ( TRB – Teachers Recruitment Board) எனப்​படும் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக நியமிக்கப்படு​கிறார்கள்.

அது​மட்​டுமின்றி வட்​டார கல்வி அலு​வலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை​யாளர், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்​னிக் விரிவுரை​யாளர் பணியிடங்​களும் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாகவே நிரப்​பப்​படு​கி்ன்​றன.

தற்​போது அரசு பள்​ளி​களில் 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. எனினும் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​படக்​ கூ​டாது என்பதற்காக அந்த பணி​யிடங்​களில் தொகுப்​பூ​தி​யத்​தில் தற்​காலிக ஆசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு கற்​பித்​தல் பணி​கள் தொய்​வின்றி நடந்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், அரசு பள்​ளி​களில் டிஆர்பி மூலம் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை விரை​வில் நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவு செய்துள்ளது. இதற்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆகஸ்ட் மத்​தி​யில் வெளி​யிட்டு போட்​டித்​தேர்​வினை நவம்​பர் மாதம் நடத்த டிஆர்பி திட்​ட​மிட்​டுள்​ளது. பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை டெட் தாள்​-2-ல் தேர்​வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்​கள் எழுதலாம்.

பட்​ட​தாரி ஆசிரியர் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர் தேர்வை பொறுத்​தவரை​யில் சம்​பந்​தப்​பட்ட பாடப்​பிரி​வில் 150 கேள்வி​களுக்​கும் கட்​டாய தமிழ் மொழி தகு​தித்​தேர்​வில் 30 கேள்வி​களுக்​கும் விடையளிக்க வேண்​டும். தமிழ் தாள் தேர்​வில் குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் எடுக்க வேண்​டும்.

தமிழ் தேர்வு மதிப்​பெண் மெரிட் பட்​டியலுக்கு எடுத்​துக்​கொள்​ளப்​ப​டாது என்​றாலும் இதில் தேர்ச்சி பெற்​றால் மட்டுமே விண்​ணப்​ப​தா​ரரின் பாடத்​தேர்வு விடைத்​தாள் மதிப்​பீடு செய்​யப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

கடைசி​யாக பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வானது கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு நடத்​தப்​பட்டு அதன்​மூலம் 2,582 ஆசிரியர்​கள் தேர்​வு செய்​யப்​பட்​டனர்.