2026-27 ம் கல்வியாண்டின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு !
2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டியைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலாண்டுத் தேர்வு :
செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
காலாண்டுத் தேர்வு விடுமுறை :
செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை விடப்படும்.
அரையாண்டுத் தேர்வு :
டிசம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறும்.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை :
டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை விடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












