தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாட கோவில்பட்டி
கே. ஆர். கல்லூரி மாணவர்கள் தேர்வு !
தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணிக்கான தேர்வு 28-04-2026 முதல் 04-05-2026 வரை கோவையில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி சம்பின்ஷிப் போட்டியின் போது தேர்வு நடைபெற்றது. பயிற்சி முகாம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் 01-07-2026 முதல் 25-07-2026 வரை நடைபெற்றது.
16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய ஹாக்கி சம்பின்ஷிப் போட்டி தமிழ்நாட்டிலுள்ள கோவையில் 28-07-2026 முதல் 08-08-2026 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தமிழக ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாட கே. ஆர். கல்லூரி மாணவர்கள் மாதேஷ், சக்திவேல், சுகுமார், தனுஷ்பாண்டியன், மற்றும் அதிபன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களை , கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், பயிற்சியாளர், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.












