தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக பாலைவன தடுப்பு தினம்!
தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பாலைவன தடுப்பு தினத்தை முன்னிட்டு ஜீன் 17 நேற்று தலைமை ஆசிரியர் அருள் சகோதரி சகாய ஹேமலதா ஜெயந்தி முன்னிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மரக்கன்றுகளை கொடுத்து சிறப்பித்தார்கள்.

2025-2026 ஆம் கல்வியாண்டில் பசுமை பயணம் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை சகாய ஹேமலதா ஜெயந்தி தலைமையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதன் பிறகு ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் .முகிலாஷினி, நிரஞ்சனா தேவி உரையாடல் மூலமாகவும். மாணவி சகாய அனுசுமா கவிதை மூலமாகவும், பதினோராம் வகுப்பு மாணவி கவிப்பிரியா சிந்தனை துளியும், மற்றும் இசைக் குயில் மாணவிகள் பாடல்கள் மூலம் பல்வேறு கருத்துக்களை விளக்கினார்கள்.

தலைமையாசிரியர் பல்வேறு கருத்துக்களை கூறிய பின் உலக பாலைவன தடுப்பு தினத்தில் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும் , பசுமை படை பொறுப்பாசிரியர் சகாய ஆனந்தியையும் பாராட்டினார்.












