கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக இரத்தக் கொடையாளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132 மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து உலக இரத்தக் கொடையாளர் தினம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சியை 15.06.2026 அன்று கல்லூரி மினி அரங்கில் நடத்தினர்.
“மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்த தானம் செய்யுங்கள். உயிர்களைக் காத்திடுங்கள்.” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மதிவண்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முனைவர் கண்ணன், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் கலந்து கொண்டு இரத்த தானத்தின் அவசியம், பாதுகாப்பான இரத்த தானம், தன்னார்வ இரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் இளைஞர்களின் சமூகப் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இரத்த தான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், இரத்த தானம் மனித உயிர்களைக் காப்பாற்றும் உயரிய சேவை என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.













