தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிகழ்வுகளை உள்ளடக்கிய “போட்டோ டைரி”யை வெளியிட்டார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் !
தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி கல்வி நிறுவனத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
கல்லூரி தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அதன் சிறப்புமிக்க பயணம், வரலாற்றுச் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பாதையைப் பதிவு செய்துள்ள “மெமோரபிலியா” (Memorabilia) நினைவு மலரும், பல்வேறு காலகட்டங்களில் கல்லூரி படைத்த மறக்க முடியாத நிகழ்வுகள் மற்றும் சாதனைகளைப் படங்களின் வாயிலாக எடுத்துரைக்கும் “புகைப்பட நாட்குறிப்பும்” (Photo Diary), இன்று (12.06.2026, வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமானமு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் மற்றும் வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் செயலர் ஏ.பி.சி.வீ. சண்முகம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு கூறியதாவது :
இந்த நிகழ்வு, கடந்த 75 ஆண்டுகளாக கல்வி, சமூகப் பணி மற்றும் மனித வள மேம்பாட்டில் வ.உ.சிதம்பரம் கல்லூரி ஆற்றி வரும் மகத்தான பங்களிப்பிற்கும், அதன் வளமான பாரம்பரியத்திற்கும், கல்விச் சிறப்பிற்கும் ஒரு நிலையான சான்றாக அமைந்துள்ளது.

கல்லூரியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கி வரும் எங்கள் நிர்வாகத்திற்கும், செயலர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கன்றேன் என்றார்.

நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர்.
















