சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026 – விரைவில் வெளிவர இருக்கிறது :
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்க இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் . அந்த வகையில் 2026 ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 16 லட்சத்திற்கும் மேற்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும், டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமாங் (Umang) செயலியிலும் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.












