NEET – தேர்வுக்கு ஹால் டிக்கெட் நாளை ஏப்ரல் 27 வெளியீடு : 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!

NEET – தேர்வுக்கு ஹால் டிக்கெட் நாளை ஏப்ரல் 27 வெளியீடு :
26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!

2026-ஆம் ஆண்டு நீட் (NEET UG 2026) தேர்வுக்கான ஹால் டிக்கெட், ஏப்ரல் 27, 2026 அன்று காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஏப்ரல் 27-க்கு மாற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமே மே 3-ம் தேதி நடை பெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைதளத்தில் நாளை வெளியாகிறது.

நாடு முழுவதும் அரசு மறும் தனியார் மருதுவக் கல்லூரியின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடை பெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடை பெறுகிறது.

என்டிஏ இணைதளத்தில் ( https://neet.nta.nic.in ) இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்ப பரிசீலனையும் முடிந்த நிலையில், மேற்கண்ட இணைத்தளத்தில் நாளை ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தேர்வுக்கு விண்ணபித்த மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது வரை இல்லாத வகையில் நீட் தேர்வுக்கு 26 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணபித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.