தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி :மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பங்கேற்பு
தூத்துக்குடி, வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் வரலாற்று மன்றம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வுக் கழகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன்; இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) வாக்காளர் விழிப்புணார்வு நிகழ்ச்சி 24.03.2026 அன்று கல்லூரி பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜதுரை அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். கனகராஜ் வாழ்த்திப் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் வாக்காளர்கள் விழிப்புணர்வின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
துணை ஆட்சியர் புவனேக்ஷ் ராம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மக்களாட்சி முக்கியத்துவத்தையும், மக்களாட்சி மாண்பை தேர்தல் எவ்வாறு நிர்ணயிக்கிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்காளர் உறுதிமொழியினை வாசித்து அனைவரையும் உறுதிமொழி எடுக்கச் செய்தார்.

முன்னதாக ஆட்சியர் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடை பெற்ற இடத்திற்கு சென்று மாணவர்களோடு உரையாடினார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வளங்கிப் பாராட்டினார்.
வரலாற்றுத் துறை மாணவர் ஜெயமாரி வரைந்த 50 அடி நீளமுள்ள ஓவியம் அனைவரையும் கவர்ந்தது.

விழாவில் பேரசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து தயாரித்த தேர்தல் விழிப்புணர்வு பாடல் வெளியிடப் பட்டது. மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் பாடல் அனைவரையும் ஈர்த்தது.

நிறைவாக வாக்களர் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை ஆட்சித்தலைவர் துவங்கி வைக்க மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர், கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் நன்றி கூறினார்.
வரலாற்றுத்துறை மாணவியர் ஐஸ்வர்யா மற்றும் பத்மா தேவி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.













