10 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப்ஸ் நியமனத்தில் மாற்றம் : தேர்வுத்துறை இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப்ஸ் நியமனத்தில் மாற்றம் :
தேர்வுத்துறை இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கென சொல்வதை எழுதும் ஸ்கிரைப்ஸ் ( Scribes )நியமன விதிகளில் தேர்வுத் துறை சில திருத்தங்களைச் செய்தது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவாற்றல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வர்களின் முகப்புத்தகங்கள் முதன்மையான விடைத்தாள்களுடன் தைக்கப்படுவதைத் தீர்மானிக்க முன்வர வேண்டும்.

சொல்வதை எழுதுபவர் ( Scribes ) நியமனங்களில் தேர்வு நடை பெறும் பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிப்பது கூடாது. அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு வழங்கப்படக்கூடிய கூடுதல் விடைத்தாள்களை போதிய அளவு பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி திங்கட்கிழமை நிறைவடைகிறது.

தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 20 ம் தேதி புதன்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.