மாநில பேச்சு போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ்

மாநில பேச்சு போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ்

28.02.2026 அன்று காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற Viksit Bharat Youth Parliament 2026 மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி வசந்தகுமாரி இரண்டாம் இடம் பெற்றார். தொடர்ந்து 12.03.2026 அன்று சென்னை அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு “ஒன்றிய பட்ஜெட் 2026 : விக்சித் பாரத் 2047 இந்திய இளைஞர்களுக்கான பாதையை உருவாக்குதல்” என்னும் தலைப்பில் பேசி பாராட்டுச் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

மாணவிக்கு கல்லூரி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.