தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டி: தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் பள்ளி சாம்பியன்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டி:
தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் பள்ளி சாம்பியன்

வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்க்கான கூடைப்பந்து போட்டி பிப்ரவரி 1 , 2 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த போட்டியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வலியிலிருந்து 7 பள்ளிகள் பங்கேற்றன.

02.01..2026 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்க்கு ஏ.பி.சி. மஹாலட்சுமி கல்லூரி செயலர் திருமதி. சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் வரவேற்புரை வழங்கினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் மரிய அந்தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும், கோப்பையையும், வழங்கினார்.

கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

விழாவின் நிறைவாக உடற்கல்வி இயக்குனர் முனைவர் சிவஞானம் நன்றியுரை வழங்கினார்.