தூத்துக்குடி, புதுக்கோட்டை மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிலம்பம் போட்டி : தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி, புதுக்கோட்டை மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிலம்பம் போட்டி :
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகில் உள்ள மங்களகிரி பகுதியிலுள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி மற்றும் மரம் வரம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சார்பாக மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

போட்டகயில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பயிற்சி பள்ளி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் அருண்குமார், தலைவர் ஜோசப் துரை ஆனந்த் , துணைப் பொருளாளர் ராமன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.