வியாபார தலங்களில் தமிழ் பெயர்களை எழுத வலியுறுத்தி தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி மாணவ – மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

வியாபார தலங்களில் தமிழ் பெயர்களை எழுத வலியுறுத்தி தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி மாணவ – மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

தூத்துக்குடியில் வியாபார தலங்களில் தமிழ் பெயர்களை எழுத வேண்டும்என விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் 17 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை நடந்து வருகிறது. இதில் இரண்டாம் நாள் வியாபார தலங்களில் தமிழ்ப்பெயர்களை எழுத வேண்டும் என கோரி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்த பேரணி தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து துவங்கியது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தபேரணி தூத்துக்குடி உதவி ஆட்சியர் அலுவலகம் வழியாக கடற்கரை சென்று சேர்ந்தது. செல்லும் வழியில் வியபாரத்தலங்களில் தமிழ்ப்பெயர்களை வைக்க வேண்டும் என அறிவுருத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஆட்சிமொழித் தொடர்பான வாசகங்களுடன் கூடிய பாதாகைகளை பிடித்துக்கொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பேரணி துவங்கும் முன்பு தமிழ் மொழி குறித்து மாணவர்களிடம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் இளங்கோ துவக்கவுரையாற்றினார். இறுதியில் தமிழ் வளர்ச்சி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, மாரிமுத்து, ஜெகஜீவன் ராம், திருக்குறள் பேரவை அன்பழகன், அய்யனராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்ட காமராஜர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.