எக்கோ கார்னிவல் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் :சுழற் கோப்பையை தட்டிச் சென்றது.

எக்கோ கார்னிவல் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி ஒட்டுமொத்த சுழற் கோப்பையை வென்றுள்ளது.

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் 16.12.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எக்கோ கார்னிவல் –கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கலைப் போட்டிகளில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி, ஒட்டுமொத்த சுழற் கோப்பையை வென்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு கூறுகையில் –

வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, வ.உ.சி கல்லூரியின் சிறப்புமிக்க பாரம்பரியத்தில் இன்னொரு பெருமைச் சின்னமாக திகழ்கிறது. இந்த முக்கிய ஆண்டில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் உழைப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த வெற்றிக்காக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, குழுப் பண்பு, போட்டி மனப்பான்மை மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தி கல்லூரிக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவ பங்கேற்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த வெற்றிக்கு காரணமான இளைஞர் நலத் துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாக்சன் மற்றும் இளைஞர் நலத்துறை பேராசிரியர்களுக்கும் அவர்களின் சிறப்பான தலைமைத்துவம், துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் ஊக்கமளிக்கும் வழிகாட்டலுக்காக பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.