கலைப் பண்பாட்டுத்துறை சார்பாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
கலைப் பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் திருநெல்வேலி, ஜவகர் சிறுவர் மன்றம் தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் சிவந்தா குளம் திருச்செந்தூர் ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளி வளாகத்தில்15.11.2025 சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் சிவப்புகழ் , வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி,மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை எமல்டா வெலன்சியா ஹெஸியா, மாவட்ட அரசு இசை பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாம செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குரல் இசை, நாட்டுப்புற பாடல்,கிராமிய நடனம் பரதநாட்டியம், ஓவியம் போன்ற அனைத்து கலைகள் சார்ந்த கலைப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. பங்கேற்ற அனைத்து மாணவ- மாணவியர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
















