சென்னையில் நடைபெறும் மாநில இளைஞர் திருவிழாவில் கடையநல்லூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் பங்கேற்பு

சென்னையில் நடைபெறும் மாநில இளைஞர் திருவிழாவில் கடையநல்லூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு நாட்டு நலப்பணி திட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நடத்தும் மாநில இளைஞர் திருவிழா சென்னை வி.ஐ. டி. பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவ, மாணவியர் 10 பேர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் கடையநல்லூர் அரசு கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் குழுத்தலைவராகவும் பங்கு பெற்றுள்ளார். அவருக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெளியப்பன் விழாவில் சிறப்பாக பங்களிப்பு செய்ய வாழ்த்து தெரிவித்தார்.