தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஜவகர் சிறுவர் மன்றம் ஆண்டு விழா
தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் கலை பண்பாட்டுத்துறை மாவட்ட அரசு இசைப்பள்ளி ஜவகர் சிறுவர் மன்றம் ஆண்டு விழா அக்டோபர் 11 ம் தேதி நடைபெற்றது .
விழாவில் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் தமிழிசை விழா சிறப்பு நிகழ்ச்சியாக ,மங்கல இசை, குரல் இசை மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் திறன்மிக்க கலைஞர்கள் கொண்டு நடைபெற்றது.













