கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆளுமைத்திறனை வளர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆளுமைத்திறனை வளர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அணி -007 சார்பாக சமூக சேவை மூலம் ஆளுமைத்திறனை வளர்த்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 6. 10. 2025 திங்களன்று கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்க.ஆங்கிலத் துறை தலைவர் முனைவர். ராம்சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.

கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கடையம் கலைவாணி கல்வி மைய முதல்வரும், 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட அலுவலர் விருது பெற்றவரும், 2017 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வு பெற்று தமிழ்நாடு சார்பாக டெல்லி குடியரசு தின விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அணி வகுப்பு குழு தலைவராக பங்கு பெற்றவருமான ராஜன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பல்வேறு ஆளுமை திறன்களை சமூக சேவை மூலம் வளர்த்துக் கொள்வது பற்றி நாட்டு நலப்பணி குறித்தும் அதன் அவசியம் குறித்தும் கருத்தரங்கில் உரையாற்றினார்.

 

முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். விழா நிறைவில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நாட்டு நல பணத்திட்டம் சார்பாக கல்லூரியில் ரத்ததானம் வழங்கிய மாணவ மாணவிகளுக்கு முதல்வர் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் 2025 ஆம் ஆண்டு தென்காசி மாவட்ட அளவில் 26-8-2025 முதல் 12-9 -2025 வரை நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தன்னார்வலர் பணி செய்து தென்காசி மாவட்ட ஆட்சியரால் பாராட்டப்பட்ட கடையநல்லூர் கல்லூரிக்கும் அதன் சார்பாக சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல பங்களிப்பு செய்த மாணவ மாணவிகளுக்கும், திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் ஆகியோருக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் அனைத்து துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இக்கருத்தரங்க நிகழ்வை நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகளுடன் இணைந்து திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

மாணவி மாலதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் இறுதியாக தமிழ்த்துறை தலைவர் முனைவர். மாரியம்மாள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.