“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு

கீழ ஈரால், தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேரடி ஒளிப்பரப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் அருட்முனைவர்.ராஜதேவன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர். பிரபு தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பச்சை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகை அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 125க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 20 பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் திட்ட அலுவலர் மோகன் குமார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.