அரை நூற்றாண்டை கடந்த தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி : 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடியது : அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்

அரை நூற்றாண்டை கடந்த தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி :
50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடியது :
அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடடியது.விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.

பொன்விழா கொண்டாட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி நன்றி திருப்பலியினை மேற்கொண்டார்.

மாலை பொன் விழா நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன், தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மைக்கேல் ராஜேஷ் ( வணிகர் சங்கம், திருநெல்வேலி.) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சி கல்லூரியின் செயலாளர் அருட் சகோதரி முனைவர். ரோசாலி, முதல்வர் அருட். சகோதரி முனைவர். ரூபா, துணை முதல்வர் முனைவர். மதுரவல்லி முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் மதுரை மாகாண தலைவி அருட். சகோதரி முனைவர். ஜாக்லின் பிரகாசம் ஆசீர்வாதங்களும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உரையும் இடம் பெற்றன.

பொன்விழா கொண்டாட்டத்தில் கல்லூரிக்கு உதவிய பங்களிப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

பொன்விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஆரோக்கியம் ஒற்றுமை மற்றும் இளைஞர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்கப் பரிசாக முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000,மூன்றாம் பரிசு ரூபாய் 1500 வழங்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவுற்றது.