கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கணினி போட்டி :
தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி கல்லூரி சாம்பியன்
கோவில்பட்டி அருகே உள்ள கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே கணினி தொடர்பான போட்டிகள் நடைபெற்றது.
கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டு துறை நடத்திய மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே கணினி தொடர்பான பேப்பர் ப்ரஷன்டேசன், வெப் டிசைனிங் , டீபக்கிங், ஆர்ட் ஃப்ரம் இ- வேஸ்ட், வினாடி வினா , அஸ் யூ லைக் இட் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரி செயலர் அருள் முனைவர். ராஜதேவன் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர். பிரபு, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ரொசாரியோ ஆன்டனி மற்றும் பொருளர் அருட்தந்தை அருள் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே நடத்திய போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 150 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி. விஜய பெனி பிமளா வரவேற்பு வழங்கினார்.
கல்லூரி செயலர் அருள் முனைவர் ராஜதேவன் தலைமை உரை வழங்கினார்.
பின்னர் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த கோப்பையை தூத்துக்குடி எ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி பெற்றது.
துறைத்தலைவர் முனைவர்.சிவசங்கரி நன்றியுரை வழங்கினார்.
மேலும் நிகழ்வில் அருட்தந்தையர்கள், நடுவர்களாக பல்வேறு துறைகளில் இருந்து முனைவர்.பிரபு, தெய்வ ரத்தினா, மோகன் குமார், முனைவர். தமிழரசி,கண்மனி, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே கணினி தொடர்பான போட்டிகளை நடத்திய கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் துறை தலைவர்.முனைவர். சிவசங்கரி, பர்வதா,செல்வி. கீர்த்தனா, செல்வன். புதியவன் மற்றும் கணினி பயன்பாட்டு துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












